×

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக ரத்ததான முகாம்

அறந்தாங்கி, ஏப்.12: புதுக்கோட்டை மாவட்டம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜெகதாப்பட்டிணம் கிளை சார்பாக 3-ம் ஆண்டு ரத்ததான முகாம் நடைபெற்றது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜெகதாபட்டிணம் கிளை மற்றும் அறந்தாங்கி அரசு மருத்துவமனை இணைந்து ரத்ததானம் முகாம் நேற்று தவ்ஹீத் மர்கஸில் நடைபெற்றது. முகாமிற்க்கு மாவட்ட தலைவர் சித்திக் ரஹ்மான் தலைமை வகித்தார்.

கிளை தலைவர் அப்பாஸ் கான், பொருளாளர் அன்வர்அலி துணைத் தலைவர் அயூப்கான் முன்னிலை வகித்தார். முகாமில் நூற்றுக்கணக்கான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர். மருத்துவ தகுதி அடிப்படையில் 34 யூனிட்கள் ரத்தம் பெறப்பட்டு, அரசு மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது. ரத்தம் வழங்கிய அனைவருக்கும், மருத்துவர் ஹேமலதா சான்றிதழ்களை வழங்கினார். மாவட்ட மருத்துவ அணி செயலாளர் சபிபுல்லாஹ் நன்றி கூறினார்.

 

Tags : Tamil Nadu Thowheeth Jamaat ,Aranthangi ,Tamil Nadu Thowheeth Jamaat Jagadapattinam branch ,Pudukkottai district ,Aranthangi Government Hospital ,Thowheeth Markaz ,
× RELATED அறந்தாங்கியில் 100% வாக்குப்பதிவை...