- பொன்னமராவதி
- பொன்னமராவதி பள்ளி
- பொன்னமராவதி அமலா அன்னை பள்ளி
- ஆண்டனி அல்போன்ஸ்
- தலைமை ஆசிரியர்
- தஞ்சாவூர் அந்தோணி மேல்நிலைப் பள்ளி
- மரியாபுஷ்பம்
- அழகேசன்
பொன்னமராவதி,ஏப்.12: பொன்னமராவதி பள்ளியில் சிறுவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. பொன்னமராவதி அமலஅன்னை பள்ளியில் சிறுவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடந்தது. விழாவிற்கு தஞ்சாவூர் அந்தோணி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் அன்டோணி அல்போன்ஸ் தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் மரியபுஷ்பம் வரவேற்றார். டாக்டர்கள் அழகேசன், இந்தியன் வங்கி மேலாளர் பாஸ்கரன், தஞ்சாவூர் பங்குத்தந்தை லூர்துசாமி, ஒலியமங்களம் பங்கு தந்தை பால்ராஜ், பாஜக செயற்குழு உறுப்பினர் சேதுபதி,
முத்தமிழ் பாசறைத் தலைவர் மாரிமுத்து, முன்னாள் ஊராட்சித்தலைவர் சோலையப்பன், தொழிலதிபர்கள் சாகிர்உசேன், முல்லை தங்கராஜ், சகுபர்சாதிக், ஓய்வு பெற்ற நிலவள வங்கி செயலர் ஹென்றி, பொன்னமராவதி ஆரோக்கிய அன்னை தேவாலய செயலர் சிரில்ஞானராஜ், ஆகியோர் வாழ்த்துரை வழங்கி குழந்தைகளுக்கு பட்டங்கள் வழங்கினர். இதில் துணைமுதல்வர் பிரின்ஸ், ஆசிரியர்கள் பாலமுரளி, அமுதா, காயத்திரி, லட்சுமி, உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் சித்ரா நன்றி கூறினார்.
