அரியலூர், ஏப். 12: அரியலூர், ஜெயங்கொண்டர் சட்டமன்ற தொகுகளின் வேட்பாளர்கள் தேர்தல் செலவின கணக்குகளை சமர்ப்பிக்கும்படி மாவட்ட கலெக்டர் ரத்தினசாமி கேட்டுக்கொண்டுள்ளார். தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல்-2026 கருத்தில் கொண்டு, 149-அரியலூர் மற்றும் 150-ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் தேர்தல் செலவினக் கணக்குகள் அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் 13.4.2026, 17.4.2026 மற்றும் 21.4.2026 ஆகிய தேதிகளில் பரிசீலனை செய்யப்படும் என்று தேர்தல் செலவின பார்வையாளர் தெரிவித்துள்ளார்.
எனவே, 149-அரியலூர் மற்றும் 150-ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் 13.04.2026, 17.04.2026 மற்றும் 21.04.2026 ஆகிய தேதிகளில் காலை 10.30 மணிக்கு அனைத்து ஆவணங்களுடனும் நேரில் ஆஜராகி தேர்தல் செலவின அறிக்கையை சமர்ப்பிக்கவும், செலவினங்களில் எந்தவித குறைபாடும் இல்லாமல் முழுமையான செலவினக் கணக்கு அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் கலெக்டர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.
