- போலீஸ் கொடி அணிவகுப்பு
- செந்துரா, பொன்பராபி
- ஜெயங்கொண்டம்
- மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர்
- விஷ்வேஷ் பா
- தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்
- அரியலூர் மாவட்டம் செந்தூரா
- பொன்பராபி
- சாஸ்திரி
- துணை கண்காணிப்பாளர்
- போலீஸ் சாலை
- ராம் சக்திவேல்
ஜெயங்கொண்டம், ஏப்.12: அரியலூர் மாவட்டம் செந்துறை மற்றும் பொன்பரப்பியில் வரும் தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஷ்வேஷ் பா.சாஸ்திரி தலைமையில் கொடி அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இக்கொடி அணிவகுப்பில், காவல் துணை கண்காணிப்பாளர் சாலை ராம் சக்திவேல் முன்னிலை வகித்தார்.
மேலும், குஜராத் மாநில ஆயுத காவல்படையினர், அரியலூர் மாவட்ட சட்டம் ஒழுங்கு மற்றும் ஆயுதப்படை காவல்துறையினர், ஊர்க்காவல் படையினர் என 250க்கும் மேற்பட்டோர் இந்த கொடி அணி வகுப்பில் கலந்து கொண்டனர். செந்துறை மற்றும் பொன்பரப்பியின் முக்கிய வீதிகளில் அணிவகுப்பு நடைபெற்றது. பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க நாங்கள் துணை இருக்கிறோம் என்ற வகையில் இந்த அணி வகுப்பு நடைபெற்றது.
