ஜெயங்கொண்டம், ஏப்.12: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி மீன்சுருட்டி பகுதியில் வாக்குச்சாவடி மையங்களை தேர்தல் காவல் பார்வையாளர் ஓம் பிரகாஷ் திரிபாதி ஆய்வு செய்தார். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதியில் தேர்தல் மேற்பார்வையாளர் (காவல்) ஓம் பிரகாஷ் திரிபாதி மீன்சுருட்டி காவல் நிலையத்திற்கு உட்பட்ட குருவாலப்பர் கோயில் வாக்குச்சாவடி மையங்கள்,
இளையபெருமாநல்லூர் வாக்குச்சாவடி மையங்கள், முத்துசேர்வமடம் குண்டவெளி (கிழக்கு) வாக்குச்சாவடி மையங்கள், காட்டக்காரம் (வடக்கு) வாக்குச்சாவடி மையங்கள் ஆகிய கிராமங்களில் உள்ள வாக்குச்சாவடி மையங்களை ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது ஜெயங்கொண்டம் வட்டாட்சியர், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ஆனந்தவேல், வருவாய் ஆய்வாளர் வெங்கடேசன், மீன்சுருட்டி காவல் ஆய்வாளர் ஜெகதீசன் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் உடன் இருந்தனர்.
