×

பூம்புகார் தொகுதியில் தேர்தல் செலவினங்கள், விதிமீறல் குறித்து நேரில் புகார் தெரிவிக்கலாம்

தரங்கம்பாடி, ஏப்.12: தமிழ்நாட்டில் சட்டமன்றப் பொதுத்தேர்தல் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் சட்டமன்றத் தொகுதிக்கு தேர்தல் செலவினப் பார்வையாளராக நர்சிங் குமார் கல்கோ நியமிக்கப்பட்டுள்ளார். பூம்புகார் சட்டமன்றத் தொகுதியில் வேட்பாளர்களின் தேர்தல் செலவினங்கள் மற்றும் விதிமீறல்கள் தொடர்பான புகார்களை தன்னை நேரில் சந்தித்து கூறலாம் என்று தெரிவித்துள்ளார்.

பூம்புகார் தொகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் தேர்தல் புகார்களை மயிலாடுதுறை சுற்றுலா மாளிகை, அறை எண் 2-இல் காலை 9.30 மணி முதல் இரவு 10 மணி வரை நேரில் சந்தித்து தெரிவிக்கலாம். அல்லது 7395988810 என்ற தொலைபேசி எண் மூலம் புகார்களை தெரிவிக்கலாம் என 162.பூம்புகார் சட்டமன்றத் தொகுதி தேர்தல் செலவின பார்வையாளர் நர்சிங் குமார் கல்கோ அறிவித்துள்ளார்.

 

Tags : Poompuhar ,Tharangambadi ,Tamil Nadu ,Narsingh Kumar Kalko ,Mayiladuthurai ,
× RELATED அறந்தாங்கியில் 100% வாக்குப்பதிவை...