×

திருவழுதிநாடார்விளையில் நற்செய்தி கூட்டம்

ஏரல், ஏப். 12: திருவழுதிநாடார்விளை புனித கரிந்தகை அந்தோணியார் ஆலயத்தில் நற்செய்தி கூட்டம் நடந்தது. இதில் திரளான இறைமக்கள் கலந்து கொண்டனர். ஏரல் அருகேயுள்ள திருவழுதிநாடார்விளை புனித கரிந்தகை அந்தோணியார் ஆலயத்தில் நற்செய்தி கூட்டம், திருப்பலி, நற்கருணை ஆசீர் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. உடன்குடி பங்குத் தந்தை டிமெல் தலைமை வகித்து நடத்தினார். இதையடுத்து பொதுமக்களுக்கு ஆலய வளாகத்தில் அசன விருந்து நடந்தது. இதில் ஏரல், குரும்பூர், ஆழ்வார்திருநகரி, சேதுக்குவாய்த்தான், அதிசயபுரம், கொற்கை, புன்னக்காயல், முக்காணி, தூத்துக்குடி, அரசன்குளம், பங்கு இறைமக்கள் கலந்து கொண்டனர்.

Tags : Thiruvazhutinadarvilai ,Eral ,St. Anthony's Church ,Eral… ,
× RELATED அறந்தாங்கியில் 100% வாக்குப்பதிவை...