- பெற்றோர் ஆசிரியர் சங்கம்
- மூகோப்பிரி
- நாசரேத்
- ஏக ரக்ஷகர் சபா நடுநிலைப்பள்ளி
- மேத்யூ ஜெபசிங்கே
- Soundararajan
நாசரேத்,ஏப்.12: நாசரேத் அருகே உள்ள மூக்குப்பீறி ஏக இரட்சகர் சபை நடுநிலைபள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்க ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் நடந்தது. சபையின் தலைவரும், பள்ளி தாளாளருமான மத்தேயு ஜெபசிங் தலைமை வகித்தார். சபை தலைமை போதகர் சவுந்திரராஜன்ஆரம்ப ஜெபம் செய்தார். வட்டார கல்வி அலுவலர் பாபையாஸ், நாசரேத் புஷ்பம் அன்கோ உரிமையாளர் செந்தில் குமார் ஆகியோர் பேசினர். மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் இடம் பெற்றன.இதையடுத்து மாணவ,மாணவிகள் மற்றும் பெற்றோர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் சபை செயலாளர் கோயில்ராஜ், பொருளாளர் நவரத்தினம், நிர்வாகக்குழு உறுப்பினர்கள் ஜெயபால், மோகன் விக்டர், ஆபிரகாம் ராஜன், நல்லதம்பி மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். ஆசிரியர் ரவி நன்றி கூறினார்.
