×

அக்னி சட்டி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

திருப்புத்தூர், ஏப்.11: திருப்புத்தூர் அருகே கீரணிப்பட்டி முத்துமாரியம்மன் கோயிலில் பால்குட விழா நடைபெற்றது. திருப்புத்தூர் அருகே உள்ள இளையாத்தங்குடி கைலாசநாதர் சுவாமி நித்தியகல்யாணி அம்பாள் தேவஸ்தானத்தைச் சேர்ந்த கீரணிப்பட்டி முத்துமாரியம்மன் கோயிலில் பங்குனி விழா ஏப்.5ம் தேதி காப்புக் கட்டப்பட்டு விழா துவங்கியது. தினமும் வெள்ளி ரிஷபம், அன்னம், சிம்ம வாகனங்களில் திருவீதி பறப்பாடு நடைபெற்றது.

5ம் திருநாளில் இளையாத்தங்குடி கோயிலில் இருந்து பால்குடம் முக்கிய அக்னி சட்டி பக்தர்கள் எடுத்து கொண்டு முக்கிய ஊர்களின் வழியாக கீரணிப்பட்டி முத்துமாரியம்மன் கோயிலை அடைந்தனர். பின்னர் பக்தர்கள் எடுத்து வந்த பாலால் அம்மனுக்கு சிறப்பு பாலாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்துடன் தீபாராதனைகள் நடைபெற்றது. மாலை நகரத்தார் மண்டகப்படி சார்பில் வெள்ளி சிம்ம வாகனத்தில் அம்மன் திருவீதி உலா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

 

 

Tags : Agni Sutti ,Tiruptudur ,Falkuda ,Kiranipatti Muthumariamman Temple ,Tiruptuur ,Bhanguni ceremony ,Kiranipatti Mutumariamman Temple ,Ilaiathangudi Kailasanathar ,Swami Nithyakalyani ,Ambala Devastanath ,
× RELATED அறந்தாங்கியில் 100% வாக்குப்பதிவை...