- சாயல்குடி
- சாயல்குடி நகர பஞ்சாயத்து
- தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதாரம்
- இயக்கம்
- சாயல்குடி நகரம்
- பஞ்சாயத்து
- சட்டப்பேரவை
- தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம்…
சாயல்குடி, ஏப்.11:சாயல்குடி பேரூராட்சி அலுவலகத்தில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் மற்றும் சாயல்குடி பேரூராட்சி அலுவலக பணியாளர்கள் இணைந்து வருகின்ற சட்டப் பேரவை தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றனர். தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் உதவி திட்ட அலுவலர் சத்ய சொரூபன் தலைமையிலும், சாயல்குடி பேரூராட்சி செயல் அலுவலர் திருப்பதி முன்னிலையில் நடைபெற்ற உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில், வாக்களிப்பது நம் ஜனநாயகத்தின் கடமை, விரல் நுனியில் தேசத்தின் தீர்ப்பை எழுதுவோம்.
நமது இலக்கு நூறு சதவீத வாக்குப்பதிவு, வாக்களிப்பதில் பெருமை கொள்வோம். இந்திய ஜனநாயகத்தின் பங்கு பெறுவோம் போன்ற வாசகங்களை வாசித்து உறுதிமொழி ஏற்றனர். இந்நிகழ்வில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் சரளாதேவி, சுபத்ரா, மகேந்திரகுமார் மற்றும் சாயல்குடி பேரூராட்சி அலுவலக பணியாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
