×

வெடி கடைகளை மூட உத்தரவு

விருதுநகர், ஏப்.11: சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, வெடிபொருள் சட்டத்தின் கீழ் உரிமம் பெற்ற அனைத்து வெடிபொருள் கடைகள் மற்றும் கிடங்குகள், ஏப்.21, 24 ஆகிய தேதிகள் மற்றும் மே 2, 3, 4 ஆகிய தேதிகளில் மூட மாவட்ட தேர்தல் அலுவலர் உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மே 4ல் நடைபெறுகிறது.

இதனையொட்டி, உரிமம் பெற்ற அனைத்து வெடிபொருள் கடைகள் மற்றும் கிடங்குகள் வாக்கு பதிவை முன்னிட்டு ஏப்.21, 24 ஆகிய தேதிகளிலும் மற்றும் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு மே 2 முதல் 4 வரையிலும் மூடப்பட்டிருக்க வேண்டும். இதனை மீறி செயல்படும் வெடிபொருள் கடைகள் மற்றும் கிடங்குகள் ஆகியவற்றின் உரிமதார்களின் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கலெக்டரும் மாவட்ட தேர்தல் அலுவலருமான சுகபுத்ரா தெரிவித்துள்ளார்.

 

 

Tags : Virudhunagar ,
× RELATED அறந்தாங்கியில் 100% வாக்குப்பதிவை...