- பாஜக
- ஒட்டன்சத்திரம்
- முருகேசன்
- ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் அழுகப்பட்டி
- விஜய்
- தமிழ்நாடு வெற்றி கட்சி
- தங்கச்சியம்மாபட்டி
ஒட்டன்சத்திரம், ஏப். 11: ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் அழகுபட்டியை சேர்ந்தவர் முருகேசன் (37). டிராக்டர் டிரைவர். இவர் நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகத்தின் உறுப்பினராக உள்ளார். முருகேசன் நேற்று முன்தினம் இரவு ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள தங்கச்சியம்மாபட்டிக்கு வந்து விட்டு டூவீலரில் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தார்.
கொல்லபட்டி புறவழிச்சாலையில் வந்த போது நீலாங்காளிவலசையை சேர்ந்த பாஜக இளைஞரணி நிர்வாகி பாரதி (25) என்பவர் கார் பின்னால் வந்த போது முருகேசனின் டூவீலர் மீது மோதியுள்ளது. இதில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டதில் பாரதி, முருகேசனை தாக்கியதாக தெரிகிறது. இதில் காயமடைந்த முருகேசன் ஒட்டன்சத்திரம் அரசு மருத்துமனையில் சிகிக்சை பெற்று வருகிறார். இதுகுறித்து புகாரின் பேரில் ஒட்டன்சத்திரம் போலிசார் பாரதி மீது வழக்குபதிந்து விசாரனை நடத்தி வருகின்றனர்.
