×

சட்டமன்ற தேர்தலையொட்டி வெடி கடைகளை மூட உத்தரவு

திண்டுக்கல், ஏப். 11: திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளதாவது: திண்டுக்கல் மாவட்டத்தில் வெடிபொருள் சட்டவிதிகள்படி உரிமம் பெற்று இயங்கி வரும் அனைத்து வெடிபொருள் விற்பனை கடைகள் மற்றும் வெடி பொருள் கிட்டங்கிகள் ஏப்.21ம் தேதி முதல் ஏப்.24ம் தேதி வரையிலும், மே.2ம் தேதி முதல் மே.4ம் தேதி வரையிலும் மூடப்பட்டிருக்க வேண்டும்.

அந்த நாட்களில் வெடிபொருள் விற்பனை கடைகள் மற்றும் வெடிபொருள் கிட்டங்கிகள் ஆகியவை செயல்படுவது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட வெடிபொருள் விற்பனை கடைகள் மற்றும் வெடிபொருள் கிட்டங்கிகள் ஆகியவற்றின் உரிமங்கள் ரத்து செய்யப்படுவதுடன் சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர்கள் மீது காவல் துறை மூலம் உரிய குற்றவியல் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 

Tags : Dindigul ,Dindigul district ,
× RELATED அறந்தாங்கியில் 100% வாக்குப்பதிவை...