×

ரயில்வே பள்ளியில் ஆண்டு விழா

மதுரை, ஏப். 11: மதுரை ரயில்வே மேல்நிலைப் பள்ளியில் 132வது ஆண்டு விழா நடைபெற்றது. இந்த ஆண்டுவிழாவிற்கு மதுரை கூடுதல் கோட்ட ரயில்வே மேலாளர் பிரசன்னா தலைமை வகித்தார். கோட்ட ரயில்வே மேலாளர் ஓம் பிரகாஷ் மீனா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். தெற்கு ரயில்வே மகளிர் நல அமைப்பின் தலைவர் சரிதா மீனா வாழ்த்துரை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், கல்வி, கலை நிகழ்ச்சிகள், விளையாட்டு மற்றும் போட்டிகளில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்குப் பரிசுகளும் விருதுகளும் வழங்கப்பட்டன. பள்ளியின் ஆசிரியர் தமிழ் செழியன் ஆண்டு அறிக்கையைச் சமர்ப்பித்தார். நிகழ்ச்சியில், மதுரை கோட்டத்தின் சிரேஷ்ட கோட்டப் பணியாளர் அதிகாரி சங்கரன், பள்ளியின் முதல்வர் அஞ்சம்மாள் மற்றும் ஆசிரியை, ஆசிரியர்கள் மாணவ, மாணவிகள், பெற்றோர் என பலர் கலந்து கொண்டனர்.

 

Tags : Railway School ,Madurai ,Madurai Railway Higher Secondary School ,Divisional Railway Manager ,Prasanna ,Om Prakash Meena ,
× RELATED அறந்தாங்கியில் 100% வாக்குப்பதிவை...