×

வெவ்வேறு பகுதிகளில் மயங்கி விழுந்த இருவர் சாவு

மதுரை, ஏப். 11: மதுரையில் இளம்பெண் உள்பட மயங்கி விழுந்த இருவர் திடீரென இறந்தது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். மதுரை மேலஅனுப்பானடியை சேர்ந்தவர் வேலுச்சாமி மனைவி அமுதா(25). இவர் உடல்நலம் சரியில்லாமல் வீட்டில் இருந்துள்ளார். திடீரென மயங்கி விழுந்தவரை உடனடியாக அக்கம் மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு அமுதாவை பரிசோதித்த டாக்டர், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவிதார். இது குறித்த புகாரின் பேரில் சிந்தாமணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மற்றொரு சம்பவம்: மதுரை செல்லூரை சேர்ந்தவர் ஹரிகரன்(30). இவர் தச்சுத்தொழில் செய்து வந்தார். சம்பவத்தன்று வேலை செய்து கொண்டிருந்தபோது, திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக அவருடன் வேலை செய்தவர்கள் அவரது முகத்தில் தண்ணீர் தெளித்தனர். ஆனாலும் அவர் மயக்கம் தெளியவில்லை. அவரை மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தார். இது குறித்த புகாரின் பேரில் மதிச்சியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

 

 

Tags : Madurai ,Amutha ,Veluchamy ,Mela Anupanadi, Madurai ,
× RELATED அறந்தாங்கியில் 100% வாக்குப்பதிவை...