×

மழையூரில் வாக்காளர் விழிப்புணர்வு விளையாட்டுப் போட்டி: வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு

கறம்பக்குடி, ஏப்.11: கறம்பக்குடி அருகே மழையூரில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி, விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே மழையூர் கிராமத்தில் புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் அமைந்துள்ளது. மழையூர் கிராமத்தில் வருவாய் துறை சார்பாக வாக்காளர் விழிப்புணர்வு பேரணி மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இப்பேரணியை கறம்பக்குடி தாசில்தார் பிரவீனா மேரி கலந்து கொண்டு தலைமை வகித்து பேரணி மற்றும் விளையாட்டுப் போட்டிகளை தொடங்கி வைத்தார்.

விழாவில் ஒன்றிய ஆணையர் சரோஜா துணை தாசில்தார் கனகவேல் மற்றும் தேர்தல் துணை வட்டாட்சியர் ஸ்டெல்லா வருவாய் ஆய்வாளர்கள் முருகேசன் மற்றும் மலையூர் கிராம நிர்வாக அலுவலர் உதய சூரியன் வருவாய் உதவியாளர்கள் கிராம நிர்வாக அலுவலர்கள் கிராம உதவியாளர்கள் அலுவலக பணியாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் வாக்காளர் விழிப்புணர்வு பேரணியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். விளையாட்டுப் போட்டிகளும் சிறப்பாக நடைபெற்றன. வாக்காளர் விழிப்புணர்வு பேரணியில் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்று வலியுறுத்தி கோஷங்களை எழுப்பிச் சென்றனர்.

 

Tags : Malaiyur ,Karambakudi ,Pudukkottai district ,Pudukkottai ,
× RELATED அறந்தாங்கியில் 100% வாக்குப்பதிவை...