×

பொன்னமராவதி அருகே முத்துமாரியம்மன் கோயில் மண்டலாபிஷேக விழா

பொன்னமராவதி,ஏப்.11: பொன்னமராவதி அருகே உள்ள அம்மன்குறிச்சி முத்துமாரியம்மன் கோயில் மண்டலாபிஷேக விழா நடந்தது. புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா கடந்த பிப்ரவரி மாதம் 22ம் தேதி நடைபெற்றது. இதனை தொடர்ந்து தினசரி மண்டல பூஜைகள் நடத்தி வழிபாடு நடத்தப்பட்டது.

இதனை தொடர்ந்து 48வது நாளான நேற்று அம்மன்குறிச்சி ஞானசேகர சிவாச்சாரியார் தலைமையில் சிவாச்சாரியார்கள் மண்டலாபிஷேக விழா நடத்தினர். இதனை முன்னிட்டு யாகவேள்வி நடத்தப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. பின்னர் மாரியம்மனுக்கு பல்வேறு வகையான அபிசேகங்கள் செய்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பின்னர் பொதுமக்களுக்கு அருட்பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் அம்மன்குறிச்சி மற்றும் சுற்றுப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

 

 

Tags : Mandalabhishek ,Muthumariamman temple ,Ponnamaravathi ,Ammankurichi Muthumariamman temple ,Kumbabhishek ,Pudukkottai district ,
× RELATED அறந்தாங்கியில் 100% வாக்குப்பதிவை...