×

சீர்காழி அருகே பறக்கும்படை வாகன சோதனையில் ரூ.83,490 பறிமுதல்

சீர்காழி, ஏப்.11: சீர்காழி அருகே தேர்தல் பறக்கும்படை நடத்திய வாகன சோதனையில் உரிய ஆவணமின்றி இருசக்கர வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட ரூ.83,490 பறிமுதல் செய்யப்பட்டது. மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி (தனி) சட்டமன்றத் தொகுதி, பறக்கும் படை துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுமதி தலைமையில் சீர்காழி வட்டம், காரைமேடு, பேருந்து நிறுத்தம் அருகில் வாகன தணிக்கை நடைபெற்றது.

அப்போது சீர்காழி வட்டம் காரைமேடு என்ற முகவரியை சேர்ந்த துர்கா தேவி க/பெ. பார்த்திபன் என்பவர் வந்த இரு சக்கர வாகனத்தை ஆய்வு செய்த போது உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வரப்பட்ட ரூ.83,490/- மூன்றாயிரத்து நானூற்று தொன்னூறு மட்டும்) கைப்பற்றப்பட்டு சீர்காழி வட்டாட்சியர் அலுவலகத்தில் தலைமை இடத்து தனி தாசில்தார் பாபுவிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்பு பறிமுதல் செய்த தொகை சீர்காழி சார்நிலை கருவூலத்தில்ஒப்படைக்கப்பட்டது.

 

 

 

Tags : Keerkazhi ,Chirkazhi ,Chirgazi ,Mayiladuthura District ,Sirkazhi ,Separate) Assembly Constituency ,Flying Force ,Deputy Regional Development Officer ,
× RELATED அறந்தாங்கியில் 100% வாக்குப்பதிவை...