×

நாகப்பட்டினம் வேளாண் அலுவலகத்தில் தேர்தலில் நூறு சதவீதம் வாக்களிக்க விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம்

நாகப்பட்டினம், ஏப். 11: தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026ஐ முன்னிட்டு வாக்குப்பதிவு ஏப்ரல் 23ம் தேதி நடைபெற உள்ளது. சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 12 நாட்களே உள்ளதால் அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் தேர்தலில் நூறு சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி, பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றது.

அதன் ஒரு பகுதியாக நாகப்பட்டினம் வேளாண்துறை அலுவலகத்தில் வேளாண் துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பங்கேற்று தேர்தலில் நூறு சதம் வாக்களிப்போம், தேர்தலில் வாக்களித்து ஜனநாயக கடமையாற்றுவோம், உங்கள் வாக்கு விற்பனைக்கல்ல என்பன உள்ளிட்ட முழக்கங்களை உறுதிமொழியாக ஏற்றுக்கொண்டனர். மேலும் அலுவலக வாயிலில் தேர்தல் ஆணையம் சார்பில் வைக்கப்பட்டிருந்த கையொப்ப பதாகையில் அனைவரும் கையொப்பமிட்டனர்.

 

Tags : Nagapattinam Agriculture Office ,Nagapattinam ,Tamil Nadu Assembly Elections 2026 ,Assembly ,
× RELATED அறந்தாங்கியில் 100% வாக்குப்பதிவை...