×

ராஜஸ்தான் மாநில எல்லை காவல்படை போலீசார் தீவிர வாகன சோதனை

வேப்பனஹள்ளி, ஏப்.11: அத்திகுண்டா அருகே உள்ள செக்போஸ்ட்டில், ராஜஸ்தான் மாநில எல்லை காவல் படை போலீசார், தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி சட்டமன்ற தொகுதியானது, கர்நாடக மற்றும் ஆந்திர மாநில எல்லையோரங்களில் அமைந்துள்ளது. இத்தொகுதிக்கு வரும் 23ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் கர்நாடக மாநில எல்லையில் உள்ள நேரலகிரி கிராமத்தில் அமைந்துள்ள செக்போஸ்ட் மற்றும் வேப்பனஹள்ளி – கிருஷ்ணகிரி நெடுஞ்சாலையில் அத்திகுண்டா கிராமம் அருகே உள்ள செக்போஸ்ட்களில் ராஜஸ்தான் மாநில எல்லை காவல் படை போலீசார், தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் தமிழக போலீசாருடன் இணைந்து தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். வெளி மாநிலங்களில் இருந்து வரும் டூவீலர், கார், லாரி உள்ளிட்ட அனைத்து வாகனங்களையும் நிறுத்தி, முழுமையாக சோதனையிட்ட பின்னரே அனுமதித்து வருகின்றனர்.

Tags : Rajasthan State Border Police ,Veppanahalli ,Athikunda ,Krishnagiri district ,Karnataka ,Andhra Pradesh ,
× RELATED 6 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு மின்னணு...