×

மோகனூர் பஸ் ஸ்டாண்டில் தண்ணீர் பந்தல் திறப்பு

நாமக்கல், ஏப்.11: நாமக்கல் மாவட்ட நிர்வாகம் சார்பில், மோகனூர் பஸ் ஸ்டாண்டில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடந்தது. நாமக்கல் மாவட்டத்தில் கடும் வெப்பம் வீசி வருகிறது. தினமும் காலை 9 மணி முதல், மாலை 5 மணி வரை அனல் பறக்கும் வெப்பம் மக்களை வாட்டி வதைக்கிறது. தினமும் பகல் நேரங்களில், 100 டிகிரியை தாண்டி வெப்பம் பதிவாகி வருகிறது. நாமக்கல் மாவட்டம், மோகனூர் பகுதியிலும் கடுமையான வெப்பம் வீசி வருவதால், மாவட்ட கலெக்டர் துர்காமூர்த்தியின் உத்தரவுப்படி, மோகனூர் பேரூராட்சி செயல் அலுவலர் கலைராணி, மோகனூர் பஸ் ஸ்டாண்டில் தண்ணீர் பந்தல் அமைத்துள்ளார். இந்த பந்தலில் பொதுமக்களின் தாகம் தீர்க்கும் வகையில் காலை முதல் மாலை வரை குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

Tags : Mohanur ,Namakkal ,Namakkal district administration ,Namakkal district ,
× RELATED வெற்றிலை விலை உயர்வு