நத்தம், ஏப்.10: நத்தத்தில் சட்டமன்ற தேர்தல்ல் நூறு சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடந்தது. இந்த பேரனிக்கு மாற்றுத்திறனாளிகள் நல மாவட்ட அலுவலர் சத்திவேல் தலைமை தாங்கி ஊர்வலத்தை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இதில், தேர்தல் துணை வட்டாட்சியர் சரவணன், வட்ட வழங்கல் அலுவலர் பாமா முன்னிலை வகித்தனர்.
இப்பேரணி, யூனியன் அலுவலகம் எதிரே உள்ள அரசு சமுதாயக் கூடத்திலிருந்து தொடங்கி மீனாட்சிபுரம் வழியாக நத்தம் பஸ் நிலையத்தை சென்றடைந்தது. பேரணியில் கலந்து கொண்டவர்கள், ‘‘வாக்களிப்பது ஜனநாயக கடமை, அனைவரும் வாக்களிப்பது அவசியம். 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும்’’ என்பதை வலியுறுத்தும் பதாகைகளை ஏந்தி முழக்கமிட்டவாறு சென்றனர். இதில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் அலுவலக ஊழியர்கள், பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
