- முதல் அமைச்சர்
- தஞ்ச்
- ஒரத்தநாடு
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- சட்டமன்ற உறுப்பினர்
- தஞ்சாவூர்
- கே
- ஸ்டாலின்
- வைதிலிங்கம்
- ஒரத்தநாடு சட்டமன்றத் தொகுதி
ஒரத்தநாடு, ஏப்.10: தஞ்சாவூருக்கு இன்று வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய வருகை தரும் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினை வரவேற்க, ஒரத்தநாடு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பொதுமக்கள் கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என வேட்பாளர் வைத்திலிங்கம் அழைப்பு விடுத்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு சட்டமன்ற தொகுதியில் திமுக மற்றும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியும் சார்பாக போட்டியிடும் முன்னாள் அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது:
இன்று தஞ்சை திலகர் திடலில் நடைபெறவிருக்கும் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள எட்டு சட்டமன்றத் தொகுதிக்கான வேட்பாளர் அறிமுக கூட்டத்திற்கு வருகை தரும் தமிழ்நாடு முதல்வர் திராவிடர் மாடல் ஆட்சியின் நாயகன், முத்தமிழறிஞர் கலைஞரின் தவப்புதல்வன் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினை வரவேற்க ஒரத்தநாடு சட்டமன்ற தொகுதிக்கு உடபட்ட கழகத்தின் முன்னோடிகள், கழகத்தின் பொறுப்பாளர்கள், ஒன்றிய,
மாவட்ட மகளிர் அணி நிர்வாகிகள், கழகத்தின் கிளைக் கழக நிர்வாகிகள், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கழக நிர்வாகிகள், பேரூர் கழக நிர்வாகிகள், சார்பு அணியைச் சேர்ந்த அனைத்து நிர்வாகிகள் மற்றும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் மாவட்ட செயலாளர், மாவட்ட பொறுப்பாளர்கள், ஒன்றிய கழக செயலாளர் உள்ளிட்ட அனைவரும் கலந்துகொண்டு முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
