×

100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி வயல்வெளியில் நாற்றை வைத்து விழிப்புணர்வு

தஞ்சை, ஏப்.10: கபிஸ்தலம் அருகே வயல்வெளியில் 100 சதவீதம் வாக்களிப்பது குறித்து நாற்றை வைத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிற 23ம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

கபிஸ்தலம் அருகே உள்ள திருவைக்காவூர் ஊராட்சி மற்றும் நடுப்படுகை ஆகிய கிராமங்களில், கிராம நிர்வாக அலுவலர்கள், உதவியாளர்கள் ஆகியோர் இணைந்து வயல்வெளியில் நெல் நடவு செய்யும் நாற்றை வைத்து 100 சத வீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர். மேலும் வயல்வெளியில் பணியாற்றும் விவசாயிகளை சந்தி த்து 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் 30க்கும் மேற்பட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

 

Tags : Thanjavur ,Kapisthalam ,Tamil Nadu Assembly ,
× RELATED அறந்தாங்கியில் 100% வாக்குப்பதிவை...