புதுக்கோட்டை, ஏப்.10: தேர்தல் அமைதியான மற்றும் சுமுகமாக நடத்துவதை உறுதி செய்யும் நோக்கில் மாவட்டம் முழுவதும் 4 நாட்கள் டாஸ்மாக் மூடப்படுவதாக புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அருணா தகவல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு சட்டமன்றம் பொதுத் தேர்தல்களை சுதந்திரமான, நியாயமான, அமைதியான மற்றும் சுமுகமாக நடத்துவதை உறுதி செய்யும் நோக்கில் இந்தியத் தயாரிப்பு வெளிநாட்டு மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் அவற்றுடன் இணைக்கப்பட்ட மதுக்கூடங்கள்,
மாநிலம் முழுவதும் ஏப்ரல் 21-ந் தேதி காலை 10 மணி முதல் 23-ந் தேதி (வாக்குப்பதிவுநாள்) நள்ளிரவு 12 மணி வரையிலும் மற்றும் மே 4-ந் தேதி (வாக்கு எண்ணிக்கை நாள்) மூடப்பட வேண்டும் எனவும், புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் உள்ள எந்தவொரு மதுபானத்தையும் விற்பனை செய்யவோ அல்லது கொண்டு செல்லவோ கூடாது என மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட கலெக்டருமான அருணா தெரிவித்துள்ளார்.
