×

இலைகடி விடுதி கிராமத்தில் தைலமர தோப்பில் தீ விபத்து

கறம்பக்குடி, ஏப்.10: கறம்பக்குடி அருகே இலைகடி விடுதி கிராமத்தில் தைலமர தோப்பில் தீ விபத்து ஏற்பட்டது.  புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே இலைகடி விடுதி கிராமத்தை சேர்ந்தவர் தேவேந்திரன் விவசாயி. இவரது தைல மர தோப்பில் நேற்று மாலை திடீரென்று தீ பிடித்து எரிந்துள்ளது.

உடனடியாக அக்கம் பக்கத்தினர் கறம்பக்குடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். தீயணைப்பு நிலைய அலுவலர் பொறுப்பு பாபில் குமார் தலைமையில் கறம்பக்குடி தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தைல மர தோப்பில் ஏற்பட்ட தீயை அனைத்து தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.

 

 

Tags : Ilaikkadi Hotel ,Karambakudi ,Devendran ,Pudukkottai district ,
× RELATED அறந்தாங்கியில் 100% வாக்குப்பதிவை...