×

குத்தவக்கரை கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோயில் பக்தர்களுக்கு பரிசு

கொள்ளிடம், ஏப்.10: கொள்ளிடம் அருகே குத்தவக்கரை கிராமம் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோயிலில் பக்தர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே குத்தவக்கரை கிராமத்தில் மிகவும் சிறப்பாக இந்த கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோயில் உள்ளது.இக் கோயிலில் சில தினங்களுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்நிலையில் இக்கோயில் திருப்பணிக்கு பணியாற்றிய மற்றும் ஆன்மீகத்தில் தீவிரமாக ஈடுபட்டு வரும் பக்தர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு கிராமத்தின் சார்பில் நேற்று பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

முதல் பரிசாக ஒரு கிராம் தங்க நாணயம், இரண்டாவது பரிசாக இரண்டு நபர்களுக்கு செப்பு பஞ்ச பாத்திரம் மற்றும் மூன்றாம் பரிசு ஆறுதல் பரிசுகள் வழங்கப்பட்டன. இவ்விழாவில் கிராம முக்கியஸ்தர்கள், மகளிர் சுய உதவி குழுவினர் மற்றும் இளைஞர்கள் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் வார வழிபாட்டு மன்ற பக்தர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். பக்தி மார்க்கம் என்ற தலைப்பில் சொற்பொழிவு நடைபெற்றது.

 

Tags : Kuthavakkarai Kannika Parameswari Amman Temple ,Kollidam ,Kuthavakkarai ,Kannika Parameswari Amman Temple ,Mayiladuthurai district ,
× RELATED அறந்தாங்கியில் 100% வாக்குப்பதிவை...