×

பெண்களுக்கு ஏற்படும் இடர்பாடுகளை தெரிவிக்க காவல் உதவி செயலியை பதிவிறக்கம் செய்ய விழிப்புணர்வு

கரூர், ஏப். 10: கரூர் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் இருந்து விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: கரூர் மாவட்ட காவல்துறையில் ஆண் காவலர்கள் அதி விரைவு படை மற்றும் பெண் காவலர்கள் அதிவிரைவு படை செயல்பட்டு வருகிறது.

பெண்கள் மற்றும் பொதுமக்களுக்கு அவசர காலத்தில் தங்களுக்கு ஏற்படும் இடர்பாடுகளை தெரிவிக்க வேண்டி, அதிவிரைவு படையினர் கடந்த இரண்டு வாரங்களில் கரூர் மாவட்டத்தில் 500க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் பொதுமக்களுக்கு காவல் உதவி செயலியை பதிவிறக்கம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த முயற்சியை மேற்கொண்ட அதிவிரைவு படையினர்களுக்கு மாவட்ட எஸ்பி ஹரி கிரண் பிரசாத் பாராட்டு தெரிவித்தார்.

 

Tags : Karur ,Karur District SP ,Karur District Police ,
× RELATED குளித்தலையில் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் வாக்குப்பதிவு