×

100% வாக்குப்பதிவை வலியுறுத்தி ஓசூரில் நடன நிகழ்ச்சி மூலம் விழிப்புணர்வு

ஓசூர், ஏப்.10: தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி, கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி, பொதுமக்களிடையே பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், ஓசூர் மாநகரில் மக்கள் அதிகளவில் கூடும் இடங்களான ரயில் நிலையம், பேருந்து நிலையம், காந்தி சிலை அருகே, தாலுகா அலுவலக சாலை ஆகிய இடங்களில் சட்டமன்ற தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி, ப்ளாஷ் மாப் நடனம் மூலம் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. ஓசூர் சப் கலெக்டர் ஆக்ருத்தி சேத்தி முன்னிலையில் நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் ஒலிபெருக்கி மூலம், 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Tags : Hosur ,Tamil Nadu Assembly elections ,Hosur, Krishnagiri district ,
× RELATED 6 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு மின்னணு...