- சமரசம் நாள்
- கிருஷ்ணகிரி நீதிமன்றம்
- கிருஷ்ணகிரி
- கிருஷ்ணகிரி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம்
- மாவட்ட ஒருங்கிணைப்பாளர்
- முதன்மை மாவட்டம்
- நீதிபதி
- லதா
கிருஷ்ணகிரி, ஏப்.10: கிருஷ்ணகிரி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், சமரச நாளை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடந்தது. இதற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான லதா தலைமை வகித்து, பொதுமக்களுக்கு சமரசம் குறித்த முக்கியத்துவம், அதன் வழிமுறைகளை எடுத்து கூறினார். மேலும், துண்டுபிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதில், கூடுதல் மாவட்ட நீதிபதி தாமோதரன், குடும்ப நல நீதிபதி நாகராஜன், விரைவு கோர்ட்டு நீதிபதி சுதா, சிறப்பு மாவட்ட நீதிபதி அமுதா, தலைமை குற்றவியல் நடுவர் சாந்தி, முதன்மை சார்பு நீதிபதி ஜெனிபர், கூடுதல் சார்பு நீதிபதி மோகன்ராஜ், மாவட்ட சட்டப்பணிகள் ஆணை குழு செயலாளர் பத்மநாபன், மாஜிஸ்திரேட் தேவராஜ் மற்றும் வக்கீல்கள், சட்டம் சார்ந்த தன்னார்வ தொண்டர்கள் கலந்து கொண்டனர். இந்த பேரணி மாவட்ட நீதிமன்றத்தில் தொடங்கி, அரசு கலைக்கல்லூரி, மாவட்ட விளையாட்டு மைதானம் வழியாக மீண்டும் நீதிமன்றத்தை அடைந்தது.
