- சீவலபெரி
- நெல்லை
- நங்குநேரி சட்டமன்றம்
- தவெகா
- ரெட்டியார்பட்டி நாராயணன்
- விஷ்ணு துர்க்கை அம்மன்
- தாமிராபராணி நதி
- பாளையங்கோட்டை ஒன்றியம்
- சுவாமி
நெல்லை, ஏப்.10: நாங்குநேரி சட்டமன்ற தொகுதி தவெக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன் பாளையங்கோட்டை ஒன்றியம் சீவலப்பேரியில் தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள, விஷ்ணு துர்க்கை அம்மன் கோயிலில் நடந்த சிறப்பு பூஜைகளில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்து, சீவலப்பேரி கிராமத்தில் இருந்து, தனது முதல் நாள் பிரசாரத்தை தொடங்கினார். தொடர்ந்து அவர் வீதி வீதியாக சென்று விசில் சின்னத்திற்கு பொதுமக்கள் மத்தியில் வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசுகையில்,‘ என்னை சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்தால் இந்தப்பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கையான ஆற்றுப்பாலத்தை உயர்மட்ட பலமாக மாற்றி தருவேன். அனைத்து கிராமங்களுக்கும் அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படும். குடிநீர், சாலை வசதிகளை ஏற்படுத்தி தருவேன்.
பொதுமக்கள் என்னை எந்த நேரமும் தொடர்பு கொண்டு தங்களது கோரிக்கைகளை தொலைபேசியில் தெரிவித்தாலே உடனடியாக நடவடிக்கை எடுப்பேன். மறுகால்தலை பகுதிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும், சீவலப்பேரி அரசு உயர்நிலைப்பள்ளி மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்படும், நொச்சிகுளத்தில் சமுதாய நலக்கூடம் அமைத்து தரப்படும், மருதூர் தடுப்பணை சுற்றுலா தளம் ஆக்கி படகு சவாரி அமைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும், பேருந்து வசதி இல்லாத கிராமங்களுக்கு கூடுதலாக பேருந்து வசதி ஏற்படுத்தி தரப்படும் என கூறினார். தமிழக வெற்றி மாவட்ட செயலாளர் ராஜகோபால், ஒன்றிய செயலாளர்கள் கிருஷ்ணகுமார், ஸ்டீபன், முருகேசன், சின்னத்துரை ஜெயபால், மகாராஜன், தலைமை செயற்குழு உறுப்பினர் சுனில் ராஜா, வெங்கடேஷ், நாராயணன், நகரச் செயலாளர் அலங்கார உடையார், மூலக்கரைப்பட்டி நகர செயலாளர் மகேந்திரன், ஏர்வாடி பேரூர் செயலாளர் ஷேக்மற்றும் தவெக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
