×

போச்சம்பள்ளியில் கட்சி துண்டுகள் விற்பனை அமோகம்

போச்சம்பள்ளி, ஏப்.10: தமிழகத்தில் ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் வரும் 23ம் தேதி நடக்கிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசியல் கட்சியினர் இரவு, பகல் பாராமல், தங்கள் கட்சி சின்னத்திற்கு வாக்கு சேகரித்து வருகிறார்கள். தங்கள் கட்சியை சேர்ந்த கொடியின் கலர்கள் பொருத்திய துண்டுகளை வாங்கி தோளில் போட்டுக்கொண்டு பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்கள். இதற்காக போச்சம்பள்ளி பகுதிகளில் உள்ள ஜவுளிக்கடைகளில், பல்வேறு அரசியல் கட்சியின் கலர்களில் உள்ள மப்ளர் மற்றும் துண்டுகளை விற்பனைக்கு குவித்து வைத்துள்ளனர். அந்தந்த கட்சியை சேர்ந்தவர்கள் ஜவுளிக்கடைகளுக்கு சென்று, தங்கள் கட்சி வண்ணத்தில் மப்ளர் மற்றும் துண்டுகளை வாங்கி சென்ற தொண்டர்களுக்கு அணிவித்து, வாக்கு சேகரித்து வருகிறார்கள். இதனால் போச்சம்பள்ளி பகுதியில் ஜவுளிக்கடைகளில் அரசியல் கட்சிகளின் துண்டு மற்றும் மப்ளர்கள் விற்பனை அமோகமாக நடக்கிறது.

Tags : Pochampally ,Tamil Nadu ,Krishnagiri district ,
× RELATED 6 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு மின்னணு...