×

விபத்தில் வாலிபர் உயிரிழப்பு

வாடிப்பட்டி, ஏப்.9: தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள ஆத்தூரைச் சேர்ந்த பாலமுருகன் மகன் மகேந்திரன்(25). இவர் கோயம்புத்தூர் தென்னம்பாளையத்தில் உள்ள ரப்பர் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் நேற்று கோவையில் இருந்து தனது மோட்டார் பைக்கில் திருச்செந்தூர் புறப்பட்டார்.

வழியில் வாடிப்பட்டி அருகே திண்டுக்கல் – மதுரை நான்கு வழி சாலையில் எதிர்பாராத விதமாக நிலை தடுமாறி கீழே விழுந்தார். அப்போது பின்னால் வந்த லாரி மோதியதில் மகேந்திரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். வாடிப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

 

 

Tags : Wadipatty ,Mahendran ,Balamurukan ,Athur ,Thoothukudi District Thiruchendur ,Coimbatore, South Nnampalayam ,Tiruchendur ,Goa ,
× RELATED அறந்தாங்கியில் 100% வாக்குப்பதிவை...