- பேராவூரணி
- பஞ்சாயத்து
- யூனியன்
- துணைப் பகுதி மேம்பாட்டு அலுவலர்
- லாசர் ரெத்தினாசாமி
- தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026
- வட்டத்திக்கோட்டை காவல் நிலையம்
- திருச்சிற்றம்பலம்-உதயசூரியபுரம் சாலை
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026ஐ முன்னிட்டு வாக்காளர்களுக்கு பணம் பட்டு வாடாவை தவிர்க்கும் பொருட்டு அமைக்கப்பட்டுள்ள, பேராவூரணி ஊராட்சி ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் லாசர் ரெத்தினசாமி தலைமையிலான பறக்கும் படையினர், திருச்சிற்றம்பலம்- உதயசூரியபுரம் சாலை வாட்டாத்திகோட்டை காவல் நிலைய எல்லையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, திருச்சிற்றம்பலம் அருகே உள்ள உப்புவிடுதி கிராமத்தைச் சேர்ந்த பழனியப்பன் என்பவர் உரிய ஆவணங்களின்றி தனது இரு சக்கர வாகனத்தில் ரூ.91,350 வைத்திருந்தது கண்டறியப்பட்டது. பின்னர், அந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டு பேராவூரணி சட்டமன்றத் தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது தாசில்தார் பாலசுப்பிரமணியன் மற்றும் போலீசார் உடனிருந்தனர்.
