×

ஒரத்தநாடு அருகே வாய்க்கால்கள் தூர்வாரும் பணி தீவிரம்

ஒரத்தநாடு, ஏப்.9: ஒரத்தநாடு அருகே கல்லணை கால்வாய் வாய்க்காலை சுற்றியுள்ள 2,935 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும் வகையில் வாய்க்கால்கள் தூர்வாரும் பணி பொதுப்பணித்துறை சார்பில் நடைபெற்று வருகிறது.

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு வட்டம் ராஜாமடம் பிரிவு வாய்க்கால் எண்.3, அழிவாய்க்கால் நத்தம் கிராமம் கல்லணை கால்வாய் பிரிவு வாய்க்கால் எண்.9, தெக்கூர் கிராமம் கைலாபிறை வடிகால் வாய்க்கால் உள்ளிட்ட பல்வேறு வாய்க்கால்களில் விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, தமிழ்நாடு அரசு நிதி ஒதுக்கீடு செய்து நீர்வளத்துறையின் மூலமாக தூர்வரும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதன் மூலம், 2,935 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றது. இந்த பணியானது கல்லணை கால்வாய் கோட்டம் செயற்பொறியாளர் வேல்முருகன், உதவி செயற்போறியாளர் புஷ்பராணி மற்றும் உதவிப்பொறியளர் சசிகலா ஆகியோரின் நேரடி கண்காணிப்பின் கீழ் நடைபெற்று வருகின்றது.

 

Tags : Orathanadu ,Public Works Department ,Kallanai canal ,Orathanadu taluk Rajamadam section canal ,
× RELATED அறந்தாங்கியில் 100% வாக்குப்பதிவை...