×

செவ்வாய்பட்டியில் ரூ.9.80 லட்சத்தில் அரசு பள்ளிக்கு சுற்று சுவர் தமிழக முதல்வருக்கு நன்றி

கறம்பக்குடி, ஏப்.9: பிலாவிடுதி ஊராட்சி செவ்வாய்பட்டி அரசு நடுநிலை பள்ளிக்கு ரூ.9.80 லட்சம் நிதி பள்ளி சுற்று சுவர் அமைத்து தந்த தமிழக முதல்வருக்கு அப்பகுதிமக்கள் நன்றி தெரிவித்து கொண்டனர்.புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் பிலாவிடுதி ஊராட்சி அமைந்துள்ளது. இந்த ஊராட்சியில் 5000 க்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். குறிப்பாக செவ்வாய்பட்டி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலை பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 500 க்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.

குறிப்பாக கல்வியில் கல்வி பயிலும் மாணவ, மாணவிகளின் நலன் கருதி பள்ளிக்கு சுற்று சுவர் அமைக்க வேண்டும் என வேண்டுகோள் வைத்துள்ளனர். அவர்களின் வேண்டுகோளை ஏற்று ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் ரூ.9.80 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு அரசு நடுநிலை பள்ளிக்கு சுற்று சுவர் அமைத்து கொடுத்தனர். மக்களின் கோரிக்கை ஏற்று சுற்றுசுவர் அமைக்க நடவடிக்கை எடுத்த தமிழக முதல்வருக்கும், ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்திற்கும், செவ்வாய்பட்டி கிராம மக்கள் நன்றி தெரிவித்து கொண்டனர்.

 

Tags : Tamil ,Nadu ,Chief Minister ,Sevvaipatti ,Karambakudi ,Tamil Nadu ,Sevvaipatti Government Middle School ,Karambakudi Panchayat Union ,Pudukkottai District ,
× RELATED அறந்தாங்கியில் 100% வாக்குப்பதிவை...