×

அறந்தாங்கி அருகே கொலை சம்பவத்தில் 2 பேர் கைது

அறந்தாங்கி, ஏப். 9:அறந்தாங்கி அருகே கொலை சம்பத்தில் தொடர்புடைய 2 பேரை போலீசார் கைது செய்து கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே இடையர் கிராமத்தைச் சேர்ந்த ஐயப்பன் என்பவரது மகன் சின்னகருப்பு(48). இவருக்கு இரண்டு பெண் குழந்தை உள்ளது. எலக்ட்ரீசியன் வேலை செய்து வருகிறார்.

நேற்று முன்தினம் இடையார் பாலம் அருகே முகத்தில் காயங்களுடன் இறந்த நிலையில் கிடந்துள்ளார்.
இச்சம்பவம் பற்றி போலீசார் விசாரணை நடத்தியதில் அதேபகுதியை சேர்ந்த 2 பேரை போலீசார் கைது செய்து ரகசியமாக விசாரணை செய்து வருகின்றனர். போலீசார் விசாரணைக்கு பிறகு கொலைக்கான காரணம் தெரியவரும் என எதிர்பாக்கப்படுகிறது. இந்த கொலை தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை செய்து வரும் சம்பவத்தால் அறந்தாங்கியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

 

Tags : Aranthangi ,Chinnakaruppu ,Ayyappan ,Idayar ,Pudukkottai district ,
× RELATED அறந்தாங்கியில் 100% வாக்குப்பதிவை...