×

கந்தர்வகோட்டை அருகே வாகன சோதனையில் வியாபாரியிடம் ரூ.76,900 பறிமுதல்

கந்தர்வகோட்டை, ஏப்.9: கந்தர்வகோட்டை தொகுதியில் உரிய ஆவணம் இன்றி வியாபாரி எடுத்துச் சென்ற 76,900ஐ தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை 178 தனி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தனிநபர் எவரும் தகுந்த ஆவணம் இன்றி 50 ஆயிரத்துக்கு மேல் ரொக்க பணம் எடுத்து செல்லகூடாது என உத்தரவு பிறப்பித்து உள்ளது.

அதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சி தலைவரும் மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரியுமான அருணா தலைமையில் மாவட்டம் முழுவதும் தேர்தல் பணி நடைபெற்று வருகிறது. மேலும் பணம் போக்குவரத்தை கண்காணிக்க நிலையான அலுவலர்கள் , பறக்கும் படையினர்,என செயல்பட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் கறம்பக்குடி வட்டாச்சியர் அலுவலகம் அருகில் பறக்கும் படை மூன்றாம் அணியின் தோட்டகலை உதவி இயக்குநர் விவேக் தலைமையில் சோதனையில் ஈடுபட்டபோது ஆலங்குடி தாலுகா ராசி மங்களம் பகுதியில் வசிக்கும் வியாபாரி குமார் மகன் சூர்யா என்பவர் சென்ற வாகனதை சோதனையிட்டபோது அதில் ஆவணம் இன்றி 76,900 ரூபாய் ரொக்கம் இருப்பது கண்டுபிடிக்கபட்டது. அதனை கந்தர்வகோட்டை தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ரவி மற்றும் துணை அலுவலர் மற்றும் வட்டாச்சியருமான பரணி வசம் ஒப்படைந்தனர். அப்பொழுது காவல் உதவி ஆய்வாளர் கந்தர்வகோட்டை ராஜாந்தி, தேர்தல் உதவியளார் செந்தில்குமார் மற்றும் காவலர்கள் உடன் இருந்தனர்.

 

Tags : Kandarvakottai ,Election Flying Squad ,Pudukkottai ,
× RELATED அறந்தாங்கியில் 100% வாக்குப்பதிவை...