×

மின்சாதன பொருட்களை திருடிய 2 வாலிபர்கள் கைது

சேலம், ஏப்.8: சேலத்தில் புதிய கட்டுமான கட்டிடத்தில் வைத்திருந்த மின்சாதன பொருட்களை திருடிய இரு வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். சேலம் நெத்திமேடு ஜே.ஜே.நகரைச் சேர்ந்தவர் தாமோதரன். பனியன் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவர் மணியனூர் ஹவுசிங் போர்டு பகுதியில் புதிதாக கட்டிடம் கட்டி வருகிறார். இதனிடையே கடந்த 5ம் ேததியன்று, கட்டிடத்திற்கு வந்து பார்த்தபோது, அங்கு மின்சாதன பொருட்கள் வைத்திருந்த அறையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.

இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த தாமோதன், உள்ளே சென்று பார்த்போது அங்கு வைக்கப்பட்டிருந்த ரூ.40 ஆயிரம் மதிப்பிலான மின்சார ஒயர் மற்றும் மின்சாதன பொருட்கள் மாயமாகியிருந்தது தெரியவந்தது. இதனையடுத்து அன்னதானப்பட்டி போலீசில் தாமோதரன் புகார் அளித்தார்.இதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், மின்சாதன பொருட்களை திருடிய தாதகாப்பட்டி அம்பாள் ஏரி ரோடு பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன்(32) மற்றும் சீலநாயக்கன்பட்டி வேலு நகரைச் சேர்ந்த சரவணன்(30) ஆகிய இருவரை கைது செய்தனர்.

 

Tags : Salem ,Damodaran ,J.J. Nagar ,Nethimedu, Salem ,Banyan Company ,Maniyanur Housing Board ,
× RELATED ேசலம் தெற்கு தொகுதியை திமுகவிடம் ஒப்படைக்கணும்