×

சமயபுரத்தில் 800 போதை மாத்திரைகளுடன் பெண் கைது

 

சமயபுரம், ஜூலை 30: திருச்சி மாவட்டம், சமயபுரம் நான்கு ரோடு அருகே போதைக்காகப் பயன்படுத்தப்படும் வலி நிவாரண மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக இன்ஸ்பெக்டர் குணசேகரனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், போலீசார் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, சந்தேகத்திற்கு இடமான வகையில் பையுடன் காத்திருந்த பெண்ணைப் பிடித்து சோதனையிட்டனர். அவர் வைத்திருந்த சிறிய பெட்டியில், மருத்துவரின் ஒப்புதல் சீட்டுயின்றி சட்டவிரோதமாகப் போதைக்காகப் பயன்படுத்த வைத்திருந்த சுமார் 800 போதை மாத்திரைகள் இருந்தது கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.

விசாரணையில், கைதானவர் திருச்சி மரக்கடை, வரகனேரி, சந்தனபுரம் பகுதியைச் சேர்ந்த முகமது யாசர் என்பவரின் மனைவி ஆஷிகா பானு (23) என்பதும், கணவன் மனைவி இருவருமே இத்தொழிலில் ஈடுபடுவதும் தெரியவந்தது. இவர் போலி முகவரிகள் மூலம் கொரியர் சேவையைப் பயன்படுத்தி இம்மாத்திரைகளை ஆர்டர் செய்து வாங்கியுள்ளார். பின்னர், கொரியர் ஊழியர் தொடர்பு கொள்ளும்போது நேரில் சென்று மாத்திரைகளைப் பெற்றுக்கொண்டு, இளைஞர்களுக்கும் மாணவர்களுக்கும் விற்பனை செய்து வருவது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக ஆஷிகா பானு மீது போலீசார் இரு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து திருச்சி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, திருச்சி பெண்கள் சிறையில் அடைத்தனர். மேலும், தலைமறைவாக உள்ள அவரது கணவர் முகமது யாசரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Tags : Samayapuram ,Inspector ,Gunasekaran ,Samayapuram No. 4 Road ,Trichy district ,
× RELATED ஸ்ரீரங்கம் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.77.92 லட்சம்