×

போராடிய மாணவர்கள் என்ன பயங்கரவாதிகளா.! ஏன் பெல்லட் குண்டு தாக்குதல்? பிரியங்கா காந்தி கேள்வி

டெல்லி: பொதுத் தேர்வுகள் (முறைகேடு தடுப்பு) திருத்த மசோதா, 2026 மீதான விவாதத்தின் போது மக்களவையில் பேசிய காங்கிரஸ் எம்.பி பிரியங்கா காந்தி, நியாயமாக போராடிய இளைஞர்கள் மீது பெல்லட் துப்பாக்கிகள் மற்றும் ஏகே-47 ரக துப்பாக்கிகளைப் பயன்படுத்த வேண்டிய அவசியம் என்ன ஏற்பட்டது என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

போராட்டத்தில் ஈடுபட மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் என்ன பயங்கரவாதிகளா.! போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது பெல்லட் குண்டுகளையும், கண்ணீர் புகைக் குண்டுகளையும் வீசியது ஏன்? ஆயிரக்கணக்கான மாணவர்கள் காந்தியின் அகிம்சை வழியில் தான் போராடினர். தங்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்க நியாயமான முறையில் குரல் எழுப்பிய இளைஞர்களை அரசாங்கம் குற்றவாளிகளைப் போல நடத்தியது கண்டிக்கத்தக்கது. அவர்கள் மீது தாக்குதல் நடத்த உத்தரவிட்டது யார்.! பிரதமரா அல்லது உள்துறை அமைச்சரா? இது காங்கிரஸ் கட்சியின் கேள்வி மட்டுமல்ல; ஒட்டுமொத்த நாடும் இதற்கான பதிலை கேட்கிறது. எனவே இதற்கு உரிய பதிலளிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

தொடர்ந்து பேசிய பிரியங்கா காந்தி, நாட்டின் மொத்த பட்ஜெட்டில் கல்விக்கான ஒதுக்கீட்டின் பங்கு ஆண்டுதோறும் அதிகரிப்பதற்குப் பதிலாக, உண்மையில் குறைந்து வருகிறது என்று குறிப்பிட்டார். வேலைவாய்ப்பை உருவாக்கும் அனைத்துத் துறைகளையும் பாஜக அரசு தொடர்ந்து பலவீனப்படுத்தி வந்துள்ளது. தேர்வு முறையே தோல்வியடைந்துவிட்டது. கடந்த பத்தாண்டுகளில் 152 முறை வினாத்தாள்கள் கசிந்துள்ளன. கோடிக்கணக்கான மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்; இருப்பினும், ஒரு குற்றவாளி கூட, அதாவது வினாத்தாள் கசிவு மாஃபியாவைச் சேர்ந்த ஒரு நபர் கூட தண்டிக்கப்படவில்லை என்று கூறினார்.

 

Tags : Priyanka Gandhi ,Delhi ,People's Assembly ,General ,of ,Congress ,P ,
× RELATED நோக்கம் நேர்மையாகும் போது தேர்வு...