×

படகு பழுதானதால் நீந்தி கரை வர முயன்றபோது விபரீதம்: கடலில் மாயமான சிறுவர்கள் சடலமாக மீட்பு

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் தருவைக்குளம் பகுதியில் கடலில் மாயமான 2 சிறுவர்கள் சடலமாக மீட்கப்பட்டனர். தருவைகுளம் கிராமத்தைச் சேர்ந்த சிறுவர்கள் 7 பேர் பைபர் படகில் கடலை சுற்றிப் பார்க்கச் சென்றுள்ளனர். குறிப்பிட்ட தொலைவு சென்ற பிறகு படகானது இன்ஜின் பழுது காரணமாக நின்றுள்ளது. பைபர் படகு நடுக்கடலில் பழுதான நிலையில் இரண்டு சிறுவர்களிடையே பேசிக் கொண்டு கடலில் குதித்து கரைக்கு வர முயற்சி செய்தனர். தொடர்ந்து மேலும் இருவர் கடலில் குதித்தனர். கடலில் குதித்த 4 பேரில் ஜோஸ்வா, மனோஜ் ஆகிய 2 சிறுவர்கள் மாயம் ஆனர்.

இதனையடுத்து படகில் இருந்த மற்ற 3 சிறுவர்கள் அவரது தந்தைக்கு தொலைபேசி வாயிலாக அவரது தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த அவரது தந்தை கரையில் இருந்த வேறொரு படகை எடுத்துக் கொண்டு சம்பவ இடத்திற்கு விரைந்தார். அப்போது கடலில் நீந்திக் கொண்டிருந்த 2 சிறுவர்களை முதலில் மீட்டு, பழுதனை படகையும், சிறுவர்களையும் முதலில் கரையில் சேர்த்தனர். தொடர்ந்து மாயமான சிறுவர்களை நேற்று மாலை 4 மணி முதல் 8 மணி வரை தேடி பார்த்தனர். கிடைக்காததால் மீனவர்கள் கரைக்கு திரும்பி விட்டனர்.

இந்நிலையில் இன்று காலை 4.30 மணி அளவில் மீண்டும் 8 படகுகளில் ஆந்த 2 சிறுவர்களை தேடும் பனி நடைபெற்றது. காலை 7 மணி அளவில் 2 சிறுவர்களும் சடலமாக மீட்கப்பட்டனர். இந்த சம்பவம் தருவைக்குளம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது,

Tags : Thoothukudi ,Taruvikulam ,Tuthukudi district ,Daruvaikulam ,
× RELATED சிவகாசி அருகே சட்டவிரோதமாக பட்டாசு...