×

கல்விக்கண் திறந்த காமராசர் அவர்களின் புகழ் ஓங்கட்டும்: உதயநிதி ஸ்டாலின் புகழஞ்சலி

சென்னை: “தமிழ்நாடெங்கும் மூடப்பட்ட 6000க்கும் மேற்பட்ட பள்ளிகளைத் திறந்து மதிய உணவு திட்டம், இலவச சீருடை, பாடப்புத்தகங்கள் என கல்வி வளர்ச்சிக்கும், தொழில்துறை வளர்ச்சி, அணைகள் உருவாக்கம் என தமிழ்நாட்டின் கட்டமைப்பு வளர்ச்சிக்கும் பெருந்தலைவர் காமராசர் ஆற்றிய பங்களிப்புகள் மகத்தானவை” என பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளையொட்டி எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும் அவர் பதிவிட்டுள்ளதாவது; “தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக உழைத்த பெருந்தலைவர் காமராசர் அவர்களின் பிறந்தநாள் இன்று.

தமிழ்நாடெங்கும் மூடப்பட்ட 6000-க்கும் மேற்பட்ட பள்ளிகளைத் திறந்து, மதிய உணவு திட்டம் – இலவச சீருடை – பாடப்புத்தகங்கள் என கல்வி வளர்ச்சிக்கும், தொழில்துறை வளர்ச்சி – அணைகள் உருவாக்கம் என தமிழ்நாட்டின் கட்டமைப்பு வளர்ச்சிக்கும் காமராசர் ஆற்றிய பங்களிப்புகள் மகத்தானவை.

சென்னை மெரினா சாலைக்கு காமராசர் அவர்களின் பெயரை சூட்டியது – குமரியில் நினைவு மண்டபம் அமைத்தது – காமராசரின் பிறந்தநாளை கல்வி வளர்ச்சி நாளாக நடைமுறைப்படுத்தியது என முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் காமராசருக்கு பல்வேறு பெருமைகளைச் சேர்த்தார்கள்.

கலைஞர் அவர்கள் வழியில், நம்முடைய தலைவர் மு.க.ஸ்டாலின், நம் திராவிட மாடல் ஆட்சியின் போது, காமராசர் கல்லூரி மேம்பாட்டுத்திட்டம், பரம்பிக்குளம் – ஆழியார் திட்டத்துக்கு அடித்தளம் அமைத்ததற்காக காமராசர் அவர்களுக்கு திருவுருவச்சிலை – திருச்சியில் காமராசர் பெயரில் மாபெரும் அறிவுலகம் என காமராசரின் புகழை மென்மேலும் போற்றினார்கள்.

கல்விக்கண் திறந்த காமராசர் அவர்களின் புகழ் ஓங்கட்டும்!” என பதிவிட்டுள்ளார்.

Tags : Udayaniti Stalin ,Chennai ,Perundalaivar Kamarasar ,Tamil Nadu ,
× RELATED பெட்ரோலில் எத்தனால் கலக்கும் திட்ட...