×

தஞ்சை மருத்துவக்கல்லூரி பகுதியில் 18ம் தேதி மின் விநியோகம் நிறுத்தம்

தஞ்சாவூர், ஜூலை 15: தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி சாலையில் அமைந்துள்ள துணைமின் நிலையத்தில் மாதந்திர பராமரிப்பு பணிகள் வரும் 18ம் தேதி (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. எனவே அந்தப் பகுதியில் இருந்து மின் விநியோகம் பெறும் கரந்தை, பள்ளிஅக்ரகாரம், பள்ளியேரி, திட்டை, பலோபநந்தவனம், சுக்கான்திடல்,

நாலுகால் மண்டபம், அரண்மனை பகுதிகள், திருவையாறு, கண்டியூர், நடுக்கடை, மேலதிருப்பந்துருத்தி, நடுக்காவேரி, திருவளம்பொழில், விளார், நாஞ்சிக்கோட்டை, மாதாக்கோட்டை, காவேரிநகர், வங்கி ஊழியர் காலனி, EB காலனி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு காலை மணி 9 முதல் மாலை 5 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளர் அண்ணாசாமி தெரிவித்துள்ளார்.

 

Tags : Thanjai Medical College ,Thanjavur ,Thanjavur Medical College Road ,Karandai ,Saliagrakaram ,Solieri ,Pattai ,Balophananthavanam ,
× RELATED தஞ்சை நாஞ்சிக்கோட்டை பகுதியில் சீரான...