×

தொகுதி மறுசீரமைப்பை ஏற்க மாட்டோம் – முதல்வர் விஜய்

கரூர்: அரசியலுக்கு வந்ததில் இருந்து தன்னை ஒரு கூட்டம் குறை சொல்லி கொண்டே இருப்பதாக கரூரில் முதல்வர் விஜய் பேசி இருக்கிறார். கரூர் சம்பவத்தின் நினைவாக தவெக சார்பில் ஒரு நினைவு சின்னம் அமைக்கப்படும் என்று கூறி இருக்கிறார்.

ஒரு மனிதன் எவ்வளவு உயரத்துக்கு சென்றாலும் மனதளவில் சில காயங்கள், வலிகளை மறக்க முடியாது எனக்கு அனைத்தையும் விட வலியும், காயமும் ஏற்படுத்தியது கரூர் சம்பவம் தான் என்று பேசி இருக்கிறார். கரூரில் கூட்டம் அதிகமாம் இருக்கிறது என அப்போதைய காவல்துறை எங்களை எச்சரிக்கவில்லை என்றும் கூட்டம் அதிகமாக இருந்தால், எங்களை கேட்காமலேயே கூட்டத்தை ரத்து செய்திருக்கலாமே என்றும் விஜய் கூறி உள்ளார்.

யார் என்ன செய்தாலும் மக்களை விட்டு நான் ஓட மாட்டேன், இத்தனை வலி, காயங்களை கொடுத்து விட்டு பழியை தூக்கி என்மீதே போடுகிறார்கள். வலியோடு இருக்கும் என்னை ஏளனமாக பேசுகிறார்கள். தவெக ஆட்சியில் எங்கும் லஞ்சம் இல்லை, லஞ்சம் ஒழிந்து மக்கள் நிம்தியாக இருக்கிறார்கள் என்றார். அதே போல தொகுதி மறுசீரமைப்பை தவெக அரசு ஏற்று கொள்ளாது என்றும் குறிப்பிட்டார். பணமா, ஜனமா என்றால் எனக்கு எப்போதுமே ஜனம் தான் முக்கியம் என்றும் பேசி இருக்கிறார். அண்ணா பிறந்தநாள் அன்று தாய் மாமன் தங்க மோதிரம் திட்டம் துவக்கி வைக்கப்பட உள்ளது. எனவே நான் ரீல் தாய்மாமன் இல்ல… ரியல் தாய்மாமன் என்றும் விஜய் பேசி கூட்டத்தினரிடம் கைதட்டல் பெற்றார்.

Tags : Chief Minister ,Vijay ,Karur ,Daveka ,
× RELATED கரூரில் 31 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கினார் முதல்வர் விஜய்