×

50 ஓவரும் ஆடிய பென் கரன் 111*

ஹராரே: வங்கதேச அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில், ஜிம்பாப்வே தொடக்க வீரர் பென் கரன் 50 ஓவரும் முழுமையாக தாக்குப்பிடித்து ஆட்டமிழக்காமல் 111 ரன் விளாசினார். ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில், ஜிம்பாப்வே 50 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 247 ரன் குவித்தது.

சக தொடக்க வீரர் பிரையன் பென்னெட் டக் அவுட்டான நிலையில், பென் கரன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 111 ரன் (135 பந்து, 9 பவுண்டரி) விளாசினார். சிக்கந்தர் ரஸா 33, பிராட் எவன்ஸ் 58* ரன் எடுத்தனர். வங்கதேச பந்துவீச்ச்சில் தஸ்கின் அகமது, மெஹிதி ஹசன் மிராஸ் தலா 2, நஹித் ராணா, ரிஷத் உசேன் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து, 50 ஓவரில் 248 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்கதேசம் களமிறங்கியது.

Tags : Ben Karan ,HARARE ,BANGLADESH ,ZIMBABWE ,Harare Sports Club ,
× RELATED இந்திய அணிக்கு எதிரான 4வது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி அபார வெற்றி!..