×

வட சென்னையின் பிரபல ரவுடியை துப்பாக்கி முனையில் கைது செய்த தனிப்படை போலீசார்

சென்னை: 7 கொலை வழக்கு உட்பட 50க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடைய வட சென்னை பிரபல ரவுடி எண்ணுர் தனசேகரை கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில் தனிப்படை போலீசார் துப்பாக்கி முனையில் கைது செய்துள்ளனர்.

வட சென்னையின் பிரபல ரவுடி தனசேகர்(45) ஏ பிளஸ் கேட்டகிரி ரவுடியான இவர் மீது கொலை, தொழிற்சாலை உரிமையாளர்களை மிரட்டுதல் உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. தனசேகர் தலைமறைவாக இருந்து வந்தாக கூறப்படுகிறது.

ஆவடி காவல் ஆணையர் உத்தரவின் அடிப்படையில் செங்குன்றம் காவல் துணை ஆணையர் தலைமையிலான எண்ணூர் போலீசார் வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில் கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில் பதுங்கி இருப்பதாக வந்த ரகசிய தகவலின்படி நேற்று நள்ளிரவில் நட்சத்திர ஓட்டலுக்கு சென்ற தனிப்படை போலீசார் ஓட்டலை சுற்றி வளைத்தனர்.

போலீசார் சுற்றி வளைத்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த பிரபல ரவுடி தப்ப முயற்சி செய்தபோது துப்பாக்கி முனையில் சுற்றி வளைத்து கைது செய்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கைது செய்யப்பட்ட தனசேகரிடம் இருந்து ஒரு துப்பாக்கி, சொகுசு கார், செல்போன் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Tags : North Chennai ,Rawudi ,Chennai ,Rawudi Tolur Dhanasekar ,Star Inn ,Kindi ,Rawudi Dhanasekar ,
× RELATED குறள்களின் பின்னணி: பிரிட்டானியா...