×

மற்ற அமைச்சர்கள் எல்லாம் நைட் டூட்டியா..? ஆதவ் மட்டும் தான் காலையில் எழுந்து வேலை செய்கிறாரா..?அமைச்சர் கீர்த்தனாவை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

சிவகாசி: ‘அமைச்சர் ஆதவ் அர்ஜூனா மட்டும் தான் காலையில் எழுந்து வேலை செய்கிறாரா? மற்றவர்கள் எல்லாம் நைட் டூட்டிக்கா செல்கின்றனர்’ என அமைச்சர் கீர்த்தனாவை நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் உள்ள அரசு பள்ளி ஒன்றில், ஆங்கிலத்தில் கேள்வி கேட்டு பதில் கூற முடியாமல் திணறும் மாணவியை அமைச்சர் கீர்த்தனா சங்கடப்படுத்தும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், அதிகாலையில் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, வாக்கிங் செல்வதை பாராட்டி அமைச்சர் கீர்த்தனா ரீல்ஸ் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி வைரலாகி வருகின்றது.

குறிப்பாக ரீல்ஸ் மோகம் கொண்ட தொழில்துறை அமைச்சர் கீர்த்தனாவின் செயல்பாடுகள் தொடர்ந்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றது. அமைச்சர் ஆதவ் அர்ஜூனா குறித்து மாணவர்கள், விளையாட்டு வீரர்கள் மத்தியில் அமைச்சர் கீர்த்தனா பேசும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. அந்த வீடியோவில், ‘தமிழ்நாட்டுல மிகச் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கும் விளையாட்டுத்துறை அமைச்சர் நம்ம கூட இருக்காரு. எனக்கு தெரிஞ்சு எந்த ஒரு விளையாட்டு துறை அமைச்சருமே அதிகாலையிலே எழுந்து மைதானத்திற்கு சென்று ஸ்போர்ட்ஸ் மீதான ஆர்வம் கொண்ட மாணவர்களுக்கிடையே சென்று, அவங்களுடன் கலந்துரையாடி, அவங்களோட பிரச்னைகளை எல்லாத்தையும் காலையிலே கேட்டு அவங்களோட காலை உணவும் அவங்க கூட சேர்ந்து சாப்பிட்டு, சோ இந்த மாதிரி ஒரு விளையாட்டு துறை அமைச்சர் கிடைக்கிறதுக்கு தமிழ்நாடு மிகவும் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என பேசியுள்ளார்.

இது வைரலாகி வருகிறது. அமைச்சர் கீர்த்தனாவின் இந்த ரீல்ஸை பார்த்து நெட்டிசன் ஒருவர், ‘அடாமிக் எனர்ஜி, வித் கப்பில், வித் காஸ்மிக் எனர்ஜி, தே வேல்யுசன் ஆப் மேன்ஸ் கைன்ட் பவர், இந்த ப்ரோக்ராம் ஆஃப் ஜாவா’ என எங்களுக்கும் சம்பந்தமில்லாமல் பேச தொியும். மாணவர்களிடம் அவர்களை ஊக்குவிக்கும் வகையில் பேசாமல் கிரேட், கிரேட் மினிஸ்டர் என்று ஆதவ் அர்ஜூனா புகழ் பாடும் புராணத்தை பேசுகிறார். ஆதவ் மட்டும்தான் காலையில் எழுந்திருச்சு வேலை செய்கிறாரா; மற்ற அமைச்சர்கள் எல்லாம் என்ன நைட் டூட்டிக்கா போகின்றனர். எதையாது உளறிக்கிட்டு இருக்கக்கூடாது என சமூக வலைதளங்களில் அமைச்சர் கீர்த்தனாவை விமர்சனம் செய்து பதிவிட்டுள்ளார். இதே கோணத்தில் பலரும் அமைச்சர் கீர்த்தனாவின் பேச்சிற்கு விமர்சனம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Tags : Aadhav ,Minister Keerthana ,Sivakasi ,Minister ,Keerthana ,Aadhav Arjuna ,Virudhunagar district ,
× RELATED அமைச்சர் கீர்த்தனா மீது தேசிய...