டெல்லி: ஜெய்ஷ்-இ-முகமது, லஷ்கர்-இ-தொய்பா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய 23 நபர்களை “பயங்கரவாதிகள்” என்று ஒன்றிய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (UAPA), 1967 பிரிவு 35-இன் கீழ் ஒன்றிய உள்துறை அமைச்சகம் (MHA) இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது.
பயங்கரவாதிகள் என அறிவிக்கப்பட்டுள்ள இந்த 23 பேரில் 17 பேர் பாகிஸ்தானியர்கள், 6 பேர் இந்தியர்கள் ஆவர். இவர்கள் அனைவரும் தற்போது பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (PoK) இருந்து கொண்டு இந்தியாவிற்கு எதிரான பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்கள் அனைவரும் பயங்கரவாத தாக்குதல்கள், ஆட்களை சேர்த்தல், ஆயுத கடத்தல், நிதி உதவி செய்தல், மற்றும் ஊடுருவல் போன்ற செயல்களில் ஈடுபட்டவர்கள் என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கீழே 23 நபரின் பெயர்கள் பட்டியலிடப்பட்டு உள்ளன…
ஜெய்ஷ்-இ-முகமது (JeM) அமைப்பைச் சேர்ந்தவர்கள்:
1. மசூத் இலியாஸ் காஷ்மீரி, 2. முகமது முசாதிக்கிக், 3. முஃப்தி முகமது அஸ்கர் கான், 4. ஹபீஸ் அப்துல் ஷகூர் 5. அப்துல்லா ஜிகாதி, 6.குலாம் ஃபரீத், 7.மௌலானா இம்தாத் உல்லா மக்கி, 8. வசீம் நூர் ஜாட்
லஷகர்-இ-தொய்பா (LeT) மற்றும் இதர அமைப்புகளை சேர்ந்தவர்கள்:
9. பிர்தௌஸ் அகமது பட், 10. ஹாரூன் ரஷித் கானாய்,11. பிலால் அகமது மிர், 12. ஆபித் கயூம் லோன், 13. நசீர் அகமது குஜ்ஜார், 14. அப்துல் ரவுஃப், 15. அஷ்பாக் அகமது, 16. ஹபீஸ் காலித் வலீத், 17. மௌலானா சைபுல்லா காலித், 18. முகமது யாகூப், 19. மௌலானா யூசுப் தைபி, 20. ஓவைஸ் பரூஸ், 21. காரி யாகூப் ஷேக், 22. ரானா இப்திகார், 23. முகமது ஷாஹித் பைசல் .
மேற்கண்ட பயங்கரவாதிகளின் சொத்துக்கள் முடக்கப்பட்டு, பயண தடைகளும் விதிக்கப்படும்.
