×

கத்தியை காட்டி மிரட்டி நகை பட்டறைக்குள் புகுந்து ஒன்றரை கிலோ தங்கம் பறிப்பு : 3 பேர் கைது

தண்டையார்பேட்டை, ஜூலை 3: நகை பட்டறையில் புகுந்து கத்தி முனையில் மிரட்டி, ஒன்றரை கிலோ நகைகளை கொள்ளையடித்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் இருவரை போலீசார் தேடி வருகின்றனர். பிராட்வே பகுதியை சேர்ந்தவர் அங்கீத் திலீப் மோரா (26). சவுகார்பேட்டை மின்ட் தெருவில் தனது உறவினரான பிரவீன் என்பவருக்கு சொந்தமான தங்கம் மற்றும் வெள்ளி பட்டறையை கடந்த 7 ஆண்டுகளாக நிர்வாகித்து வருகிறார். இந்நிலையில், நேற்று மதியம் அங்கீத் மற்றும் அவரது உறவினரான அஷித் (26) என்பவரும் பட்டறையில் வேலை செய்து கொண்டிருந்தார்.

அப்போது, வாடிக்கையாளரான உசேன் மற்றும் சாஜித் ஆகியோர் தங்க நகைகளை உருக்குவதற்கு கொண்டு வந்தனர். அவர்களை தொடர்ந்து, முகமூடி அணிந்து வந்த 3 பேர், கையில் பட்டா கத்தியுடன் பட்டறையின் உள்ளே புகுந்து, அங்கீத்தை கத்தியால் தாக்கி, பட்டறையில் இருந்த 1 கிலோ 500 கிராம் தங்கத்தை கொள்ளையடித்து கொண்டு தப்பினர். அப்போது, கடை ஊழியர்கள் ஒருவரை மடக்கிப் பிடித்து யானைக்கவுனி குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

நகை கொள்ளையில் ஈடுபட்ட திருச்சி மாவட்டம் லால்குடியைச் சேர்ந்த ஆறுமுகம் (22), வால்டாக்ஸ் சாலை கல்யாணபுரத்தை சேர்ந்த லோகேஷ் (23), ஹேராம் (எ) ரமணா (24) ஆகியோரை கைது செய்தனர். கொள்ளையடித்த நகையை லோகேஷின் மாமா ரஜினி என்பவரது வீட்டில் இருந்து போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள இருவரை தேடி வருகின்றனர்.

 

Tags : Dandaiyarpet ,Ankit Dilip Mora ,Broadway ,
× RELATED சென்ட்ரல் ரயில் நிலையம் முன்பு...